தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் - மத்திய அமைச்சர் விளக்கம்

ஜூலை 26ஆம் தேதி வரை தமிழகத்திற்கு, 2 கோடியே 15 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் - மத்திய அமைச்சர் விளக்கம்
Published on

தமிழகத்திற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்தும், மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் தடுப்பூசியை வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்து உள்ளதா என, மக்களவையில் பாரிவேந்தர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், தமிழகத்திற்கு இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 71 ஆயிரத்து 920 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இவற்றில் ஒரு கோடியே, 83 லட்சத்து 78 ஆயிரத்து 470 தடுப்பூசிகள் கோவிஷீல்டு என்றும், 31 லட்சத்து 93 ஆயிரத்து 450 தடுப்பூசிகள் கோவெக்ஸின் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கூடுதல் தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மக்கள் தொகை, தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் தடுப்பூசி விரயம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com