ஒரே ஒரு போலி முத்திரை.. NRI வங்கியில் லட்ச கணக்கில் சுருட்டிய வருவாய் ஆய்வாளர்கள்
சென்னை மாவட்ட ஆட்சியரின் முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி செய்த இரண்டு வருவாய் ஆய்வாளார்கள் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நலநிதி வங்கி கணக்கில் இருந்து 11.63 லட்சம் ரூபாய் மோசடி செய்து பெறப்பட்டுள்ளதாக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம் அளித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை நடிக்க வைத்து வருவாய் ஆய்வாளர்களான சுப்பிரமணி மற்றும் பிரமோத் ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து விலைவுயர்ந்த் பைக் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம், தங்க மோதிரம் போலி ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வருவாய் ஆய்வாளர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
