Andhra Pradesh | 654 கிராம்.. 9.5 லட்சம் ரொக்கத்தோடு கையும் களவுமாக பிடிபட்ட பிரபல கொள்ளையன்

654 கிராம்.. 9.5 லட்சம் ரொக்கத்தோடு கையும் களவுமாக பிடிபட்ட பிரபல கொள்ளையன்

Andhra Pradesh | 654 கிராம்.. 9.5 லட்சம் ரொக்கத்தோடு கையும் களவுமாக பிடிபட்ட பிரபல கொள்ளையன் #AndhraPradesh #theft #thanthitv ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பிரபல கொள்ளையனை 13 நாட்களில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 15ம் தேதி விஜயவாடா என்.டி.ஆர். காவல் ஆணையரக எல்லையில் உள்ள ஒரு வீட்டில் 764 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் துப்பு துலக்கிய போலீசார், தெலங்கானாவை சேர்ந்த பிரபல கொள்ளையனை கைது செய்தனர். ஏற்கனவே 95 வழக்குகளில் தொடர்புடைய இந்த கொள்ளையன், ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை நோட்டமிட்டு, விடுதியில் தங்கியிருந்து கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொள்ளையனிடம் 654 கிராம் தங்க நகைகள் மற்றும் 9.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. ​

X