'அந்த' கறியை சமைத்து சாப்பிட்ட வடமாநிலத்தவர்களை சுவை நாக்கை - விட்டு போவதற்குள் தூக்கிய போலீஸ்

கர்நாடகாவின் துமக்கூரில் தேசிய பறவையான மயில்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட ஒடிசாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார நாயக்கன ஹல்லி பகுதியில் அமைந்திருக்கும் செங்கல் சூளையில் வேலை பார்த்த பிட்டிங் நாயக், பைஷாக் தாவ், துபா காபட் ஆகிய கூலித் தொழிலாளிகள், மயிலை வேட்டையாடி சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மூவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். சம்பவத்தன்றும் அதே தகவல் கிடைக்கவே உடனடியாக அங்கு விரைந்த போலீசார் மூவரிடம் இருந்தும் சுமார் 3 கிலோ எடையுள்ள சமைத்த மற்றும் சமைக்காத மயில் கறி, தோகைகள் மற்றும் வலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com