ஆதரவை திரும்ப பெற்றார் நிதிஷ்குமார் - அதிர்ச்சியில் பாஜக
- மணிப்பூரில் பாஜக அரசுக்கான ஆதரவை நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி திரும்ப பெற்றுள்ளது.
- இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய ஆதரவாக இருந்த பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கட்சித் தாவலுக்கு பெயர் போனவர் என்ற நிலையில், அவரது இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மணிப்பூரில் தனது கட்சியைச் சேர்ந்த ஒற்றை எம்எல்ஏவான அப்துல் நசீர் இனி எதிர்க்கட்சியாக செயல்படுவார் என நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.
- கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் ஆறு எம்எல்ஏக்களை கொண்டிருந்த நிலையில், அதில் 5 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவியது குறிப்பிடத்தக்கது.
Next Story
