Bihar | Nithishkumar | பீகாரில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதிஷ்குமார்

x

பீகாரில் மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் ரூ.1,100ஆக உயர்வு-நிதிஷ்குமார்

பீகாரில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தின்கீழ் வழங்கப்படும் மாதாந்திர தொகையை 3 மடங்காக உயர்த்தி, முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கான மாதாந்திர தொகை 400 ரூபாயிலிருந்து, ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், இது அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்கே இத்தொகை வரவு வைக்கப்படும் எனவும்,

இந்த அறிவிப்பின் மூலம், 1 கோடியே 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதிஷ்குமார் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்