Nitish Kumar | JDU | நிதிஷின் ராஜினாமா முடிவு..? கட்சி அலுவலகம் சூறை.. சொந்த கட்சியினரே ஆவேச அட்டாக்
பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அவர் விரைவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி தொண்டர்கள் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் நிதீஷ் குமார் இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
