மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Published on
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் 2025 ஆண்டுக்கு பிறகு நகரப் பகுதியில் மின்கலன்களால் இயங்கும் 4 சக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்க நிதி ஆயோக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முடிவு செய்துள்ளார். படிப்படியாக மின்கலன்களால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com