ஒரே அறிவிப்பு.. ஒட்டுமொத்த இந்தியாவும் Vibe-u.. மீம்ஸ் மழையில் நிர்மலா சீதாராமன்
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்ற மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாத வருமானம் ஈட்டும் நடுத்தர மக்களின் தற்போதைய மனநிலையை பிரதிபதிலிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் உலாவரும் சில மீம்ஸ் வீடியோக்களின் தொகுப்பு இது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களை செம குஷியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்கள் மீது கடும் வரிச்சுமையை திணிப்பதாக எதிர்க்கட்சிகள்
இதுவரை விமர்சனங்களை முன்வைத்து வந்தன.
கடந்த முறை பாப்கார்னுக்கும் விதிக்கப்பட்ட வரி சமூகவலைதளங்களில் பேசுபொருளானது.
இந்த சூழலில், புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கவும், சேமிப்பை ஊக்குவிக்கவும், பெருகிவரும் விலைவாசியை கருத்தில்கொண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் மக்கள் மனநிலை கொண்டாட்டமாகப் பிரதிபலிக்கிறது.
கடைசி பந்தில் சிக்சர் அடித்த கிரிக்கெட் வீரராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சித்தரிக்கிறது இந்த மீம்.
பார்ட்டியில் கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும் இந்தக் காட்சிகள் போல் மிடில் கிளாஸ் மக்களின் சந்தோஷம் இருக்கிறதாம்.
கப் அடித்த பிறகு விராட்கோலி தலைமையில் வீரர்கள் செம வைபாக வரும் இந்த வீடியோ போல மகிழ்ச்சி தாண்டவமாடுகிறதாம்.
நடுத்தர மக்களின் கண்களுக்கு தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி தெரிகிறாராம்.
ரிலாக்ஸ் மோடில் ரஜினி அமர்ந்திருக்கும் இந்த திரைப்படக் காட்சியைப் போல மாத சம்பளம் பெறுவோர், வரி விலக்கு அறிவிப்பால் மன நிம்மதி அடைந்திருப்பதாக காட்டுகிறது இந்த மீம்.
இதுபோல், பிரபல திரைப்படக் காட்சிகள் பலவும் சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்களாக உலா வருவது கவனம் பெற்றுள்ளது.
