"நிர்மலா சீதாராமனுக்கு தகுதியே இல்ல... பதவியிலிருந்து நீக்க" - ஜனாதிபதிக்கு பறந்த புகார்

x

சேலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில்,

சென்னை சரக்கு சேவைத் துறை துணை ஆணையர் பாலமுருகன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சம்மன் அனுப்பப்பட்ட இரண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் 450 ரூபாய்தான் உள்ளது என்றும், இரண்டு பேரும் அரசு முதியோர் ஓய்வூதியம் 1000 ரூபாய் பணத்தையும், ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களையும் பெற்று வருகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாஜக நிர்வாகிக்கும் இவர்களுக்கும் நிலப்பிரச்னை உள்ள நிலையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என தெரிவித்துள்ள அவர், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரான பிறகு அமலாக்கத் துறை பாஜகவின் கொள்கை துறையாகவே மாறிவிட்டது என குற்றம்சாட்டி உள்ளார். ஆகவே, பட்டியலின ஏழை விவசாயிகளுக்கு நீதி வழங்கும் வகையிலும், அமலாக்கத் துறையை காப்பாற்றும் வகையிலும் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து நிர்மலா சீதாராமனை நீக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்