இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தீவிர கவனம் - நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த தீவிர கவனம் - நிர்மலா சீதாராமன்
Published on
மாநிலங்களவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், பட்ஜெட் ஒதுக்கீடுகள் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்று கூறினார்.உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்துவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு வைக்கப்பட்டு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.முதலீடுகளை ஈர்ப்பதற்கு பிரதமர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அடுத்த 5ஆண்டுகளில் முதலீடுகள் வளர்ச்சி அடைவதன் மூலம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 லட்சம் கோடி டாலராக இருக்கும் என்றும் கூறினார்.அந்நிய முதலீட்டு கொள்கைகளில் தளர்வு, குறைவான கார்ப்பரேட் வரி, நிறுவனங்களின் ஆண்டு வருமான வரி வரம்பு உயர்வு ஆகியவற்றால் வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மின்சார வாகனங்கள் ஊக்குவிப்பு, ஜிஎஸ்டியில் வரிக்குறைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மண்டல வாரியாக சிறு குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும் என்றும், உள்ளூர் தொழில்களுக்கு கடனுதவி விரைவுபடுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com