நிர்பயா வழக்கு : குற்றவாளி பவன்குமார் மனு தள்ளுபடி

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் தாக்கல் செய்த புதிய மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நிர்பயா வழக்கு : குற்றவாளி பவன்குமார் மனு தள்ளுபடி
Published on

நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் தாக்கல் செய்த புதிய மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பலாத்கார சம்பவம் நடந்த 2012ஆம் ஆண்டு தான் சிறார் என்றும், தன்னை சிறார் தண்டனை சட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும் குற்றவாளியான பவன் குமார் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததுடன், பவன் குமாரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்குக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com