நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் : அவசர வழக்காக உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Published on

குற்றவாளிகளின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்த நிலையில் 4 பேருக்கும் பிப்ரவரி 1ந் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்க கோரி முகேஷ் குமார் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியதையடுத்து முகேஷ் சிங்கின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com