நிரவ் மோடி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோசடி, இங்கிலாந்து நாட்டில் தங்கிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நிரவ் மோடி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
Published on
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோசடி, இங்கிலாந்து நாட்டில் தங்கிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரை நாடு கடத்தக் கோரி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே இங்கிலாந்துக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில், நிரவ் மோடி அங்கு இருப்பதை மான்செஸ்டர் போலீசார் உறுதி செய்துள்ளனர். அவரை நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் இதனை தமது பதிலில் தெரிவித்துள்ளார். விரைவில் அவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com