நிரவ் மோடியின் ரூ. 637 கோடி சொத்து முடக்கம்

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
நிரவ் மோடியின் ரூ. 637 கோடி சொத்து முடக்கம்
Published on
பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியின் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி, அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. நிரவ் மோடியும், அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக் ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி, மோசடி செய்து விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது . சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், இருவருக்கும் சொந்தமான அபார்ட்மெண்டுகள், சொத்துக்கள், நகைகள், வங்கி சேமிப்புகள் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com