இரண்டு பெண்களுக்கு நிஃபா தொற்று மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மூன்று மாவட்டவங்களில் நிஃபா தொற்று பதிவாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாலக்காட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும், மலப்புரத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் நிஃபா தொற்று உறுதியாகியுள்ளது. முதற்கட்ட பரிசோதனையில் நிஃபா தொற்று உறுதிப்படுத்துவதற்கு பூனே தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு மாதிரிகள் அனுப்ப பட்டுள்ளது. சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story