டெல்லியை திணற விட்ட அடை மழை - ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

x

டெல்லியில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. துவாரகா, மின்டோ சாலை, கீதா காலனி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்று காரணமாக டெல்லி விமானநிலையத்தின் 3வது முனையத்தில் உலோகத்தினால் ஆன கட்டமைப்பு ஒன்று சேதமடைந்தது. மோசமான வானிலையால் சில விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.புரம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. டெல்லியில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்