இனி AC பயன்படுத்த புதிய விதிமுறைகள் - மத்திய அரசு போட்ட ரூல்ஸ்

x

இந்தியாவில் இனி AC பயன்படுத்த புதிய விதிமுறைகள்

ஏர் கண்டிஷனர்களின் குளிர்விக்கும் அளவில்

புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வரும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

ஏசி-களுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை அமைக்கப்படும்...

அதாவது 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பப்படுத்தவோ முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இது ஒரு சோதனை முயற்சி என தெரிவித்த மத்திய அமைச்சர், வெப்பநிலை அமைப்புகளை தரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இது ஒரு முதல் வகையான சோதனை என்று தெரிவித்தார்.

ஏசி பயன்பாட்டில் சீரான தன்மையைக் கொண்டு வரவும், மிகக் குறைந்த குளிரூட்டும் அமைப்புகள் காரணமாக அதிகப்படியான மின் பயன்பாட்டைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த விதிமுறை, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, வாகனங்களில் உள்ள ஏர் கண்டிஷனிங் அமைப்புகளுக்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றிற்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்