விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் : புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.
விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் : புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான விழா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, வயதுக்கு ஏற்ப, இந்த பிரமீயம் தொகை மாறுபடும். விவசாயின் மனைவியும் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும், விவசாயி மரணம் அடைந்தால், அவரது மனைவிக்கு, பென்ஷன் கிடைக்கும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com