புதிய பென்ஷன் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார்.
புதிய பென்ஷன் திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
Published on
விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். விழா மேடையில், ஓய்வூதிய பயனாளிகளுக்கு , திட்டத்தில் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை பிரதமர் மோடி வழங்கினார். 2 ஹெக்டேர் வரை, விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், இந்த திட்டத்தில் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்ந்து மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.
X

Thanthi TV
www.thanthitv.com