``அந்த நாள் வெகு தொலைவில் இல்லை..'' - உறுதியாக அடித்து சொன்ன PM மோடி
உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட சக்தியாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவரது பிறந்த இடமான ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க நாமும் சுபாஷ் சந்திர போசை போன்று நமது சவுகரியமான சூழலில் இருந்து வெளிவர வேண்டும் என்று உரையாற்றினார்
Next Story
