Visakhapatnam | என்சிஎல் நிறுவனத்தின் புதிய சிமெண்ட் ஆலை விசாகப்பட்டினம் அருகே துவக்கம்

x

இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றான என்சிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே உள்ள தள்ளப்பாளையம் என்ற இடத்தில் அதிநவீன புதிய சிமெண்ட் ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையை, மத்திய கனரக தொழில்கள் மற்றும் உருக்குத் துறை இணை அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா திறந்து வைத்தார். 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையால், நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய சிமெண்ட் ஆலையில் இருந்து, இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், தென்னிந்திய பகுதிகளுக்கும் விரைவாகவும், குறைந்த செலவிலும் சிமெண்ட்டை கொண்டு சேர்க்க முடியும். தற்போதுள்ள 'நாகார்ஜுனா' என்ற பிராண்டின் கீழ் இந்த ஆலை பிரத்யேக வகையில் சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் சிமெண்ட்களைத் தயாரிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்