சத்தீஸ்கரில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

x

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில், 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுக்மா-தண்டேவாடா Sukma-Dantewada எல்லையில் உள்ள உபம்பள்ளி கெர்லபால் Upampalli Kerlapal வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இரண்டு வீரர்கள் லேசான காயமடைந்தனர். ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்