கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

ராணுவத்தில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
Published on
ராணுவத்தில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பொறுப்பேற்ற அவருக்கு, முறைப்படி பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடற்படை வீரர்களின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பாவின் பதவிக்காலம், நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, துணை தளபதியாக இருந்த கம்பீர் சிங், புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com