

ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றங்களுக்காக, அசோக் ஜாதவ் என்ற லாரி டிரைவருக்கு நாட்டிலேயே அதிகபட்சமாக 86 ஆயிரத்து 500 அபராதம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.உதவியாளரை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்கு அபராதம் ஐந்து ஆயிரம் ரூபாய், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்கு ஐந்து ஆயிரம் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சுமை ஏற்றியதற்காக 56 ஆயிரம் ரூபாய் என பல விதிகளை மீறியதாக மொத்தம் ரூ.86 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. 5 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பார்த்த லாரி டிரைவர், இறுதியாக 70 ஆயிரம் ரூபாயைதண்டத் தொகையாக செலுத்தியுள்ளார்.