Nashik TCS Issue | நாட்டையே உலுக்கிய நாசிக் விவகாரம் - அடுத்தடுத்து வெளியான பகீர் தகவல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் திட்டமிட்டு மதமாற்ற முயற்சிக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் பெண்களை அலுவலகத்தோடு நிறுத்தாமல், சமூக வலைதளங்களிலும் பின்தொடர்ந்து கண்காணித்த தாகவும் , அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களைச் சேகரித்து, ஆபாசமான குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மனரீதியான சித்திரவதை செய்ததாகவும் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் யாரையாவது சந்தித்தால் அல்லது எங்கு சென்றாலும் அதைக் கண்காணித்து மிரட்டியதும் போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 தனி தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
