NASA கை கோர்த்த நாசா- இஸ்ரோ... அறிவியல் உலகை திரும்ப வைத்த `நிசார்’ குறித்து வெளியான அப்டேட்
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரிக்கும் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்தாண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக 'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' நிசார் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர். இந்த செயற்கைகோள் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களை வழங்கும். இந்த செயற்கைக்கோளை இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இந்தாண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story