இந்து நண்பனிடம் பேசிய முஸ்லீம் பெண் - புர்காவை பிடித்து இழுத்த கும்பல்.. பரவிய வீடியோ

x

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில், புர்காவை பிடித்து இழுத்து இஸ்லாமிய பெண்ணை அவமதித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்து மதத்தை சேர்ந்த ஆண் நண்பனிடம், இஸ்லாமிய பெண் பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், புர்காவை பிடித்து இழுத்து அந்த பெண்ணை அவமரியாதை செய்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இஸ்லாமிய பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வீடியோவில் பதிவான 6 பேரை கைது செய்தனர். அவர்கள் நிமிர முடியாமல் நொண்டி நொண்டி நடந்து வரும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்