ஆந்திரா|கடப்பா அமீன் பீர் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு
கடப்பா அமீன் பீர் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு
ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடைபெற்ற உருஸ் உற்சவம் மற்றும் சந்தனக்கூடு திருவிழாவில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.
அமீன் பீர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் உருஸ் உற்சவத்தின் ஒரு பகுதியாக, நேற்று இரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஏ.ஆர். ரஹ்மானை, தர்கா நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, தர்காவில் மலர் போர்வையைச் சமர்ப்பித்து, அவர் தொழுகையில் ஈடுபட்டார். ஆண்டுதோறும் இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
அவரைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தர்கா வளாகத்தில் திரண்டதால், தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
