முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறை முன்பாக அவரின் குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ
Published on

முன்விரோதத்தால் கடந்த ஆண்டு கொலை : குழந்தையின் கையில் பட்டா கத்தி தந்து சபதம்... இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோ

புதுச்சேரியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நண்பனின் கல்லறை முன்பாக அவரின் குழந்தையின் கையில் பட்டா கத்தி கொடுத்து இளைஞர்கள் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி திப்புராயபேட்டையை சேர்ந்தவர் திப்லான். முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் தாவீத், கவுசிக பாலசுப்பிரமணி, தணிகையரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிலர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் திப்லானின் பிறந்தநாள் அன்று அவரது கல்லறையில் நண்பர்கள் கூடினர். திப்லானின் குழந்தையின் கையில் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட வைத்த அவர்கள், கொலை செய்தவர்களை பழி வாங்கும் வகையிலான பாடலையும் பாடி சபதம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் பரவி வரும் நிலையில் ஒதியஞ்சாலை பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற மணி என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com