மூணாறு ராஜமலை நிலச்சரிவு - மேலும் ஒரு சடலம் மீட்பு

மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களில், மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூணாறு ராஜமலை நிலச்சரிவு - மேலும் ஒரு சடலம் மீட்பு
Published on
மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களில், மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட கடந்த ஏழாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 18 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் 65 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில், பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன நிலையில், மேலும் நான்கு பேரின் உடல்களை தேடுதம் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com