ஒற்றை 'படையப்பா'... மிரண்ட மொத்த ஊர் - மிரளவிடும் காட்சிகள்
மூணார் பகுதியில் கடைகளை சூறையாடிய படையப்பா யானையை, வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட மூணார் பகுதியை, படையப்பா காட்டு யானை அச்சுறுத்தி வந்தது. பேருந்தை வழிமறிப்பது, கடைகளை நொறுக்குவது, குடியிருப்பு பகுதிகளில் நுழைவதுமாக இருந்த படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதை அறிந்த வனத்துறையினர் படையப்பா யானையை நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
Next Story
