மும்பையில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு பால்கனியில் கிட்டார் வாசிப்பதை இரண்டு கிளிகள் ரசிப்பது அதிசயமாக உள்ளது. கிட்டார் சப்தம் கேட்டதும், எங்கிருந்தோ பறந்து வரும் அந்த கிளிகள், சில மணித்துளிகள், இசையை கேட்டு கிரங்கி நிற்கின்றன. செல்போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.