நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில், பெரும்பாலான மக்கள் சிவப்பு சிக்னல் விழும் போது பொறுமை காக்காமல், ஹாரன் எழுப்பிய வண்ணம் வரிசையில் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தகுந்த தண்டனை அளிக்க புதிய யுக்தியை மும்பை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, ஹாரன் ஒலி 85 டெசிபல்களை தாண்டினால், சிவப்பு சிக்னல் அதிக நேரம் எரிய வைக்கப்படும். இதன் மூலம் காத்திருக்க பொறுமையில்லாதவர்கள் இன்னும் கூடுதல் நேரம் சிக்னலில் காத்திருக்க நேரிடும். இந்த தண்டனையால், மும்பையில் தற்போது சிக்கனலில் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.