

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. போலீசார் பொதுமக்கள் என 160 பேரை பலி கொண்ட இந்த கொடூர சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.