சயீப் அலிகானை குத்திய வழக்கு..குற்றவாளியை அழுத்தும் நீதிமன்றம் | Saif Ali Khan | Mumbai
நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட நபருக்கு போலீஸ் காவலை 29ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவருக்கு விதிக்கப்பட்ட 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததால், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதையேற்று, ஜனவரி 29ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
Next Story
