டெல்லியைவிட மோசமான மும்பை.. அதிர்ச்சி ரிப்போர்ட்

டெல்லியைவிட மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. தென்மேற்குப் பருவமழைக்காலம் முடிவடைந்த நிலையில், மும்பையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தேரி, நவிமும்பை உள்ளிட்ட இடங்களில் கடந்த இரு தினங்களில் தரக்குறியீடு 113, 115 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக, மும்பை சத்ரபதி சிவாஜி முனையத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com