Mumbai | I Phone | திடீர் பரபரப்பு - ஐபோன் வாங்க சென்ற இடத்தில் மாறி மாறி அடித்துக்கொண்ட இளைஞர்கள்

x

மும்பையில் ஐபோன் வாங்க திரண்ட இளைஞர்கள் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்-17 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வாங்குவதற்காக மும்பை ஜியோ சென்டரில் நள்ளிரவு முதலே இளைஞர்கள் வரிசைகட்டி நின்றனர். இந்நிலையில், ஒரு சிலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் இளைஞர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது. பின்னர், அத்துமீறி நுழைந்தவர்களை பாதுகாவலர்கள் வெளியே அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்