Mumbai | Heavy Rain | 'ரெட் அலர்ட்' .. மும்பையை வெளுத்தெடுத்த கனமழை.. பறந்த முக்கிய வார்னிங்
'ரெட் அலர்ட்' .. மும்பையை வெளுத்தெடுத்த கனமழை.. பறந்த முக்கிய வார்னிங்
Mumbai | Heavy Rain | 'ரெட் அலர்ட்' .. மும்பையை வெளுத்தெடுத்த கனமழை.. பறந்த முக்கிய வார்னிங் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மும்பை, தானே மற்றும் பால்கர் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது. ஒரே நாளில் பல இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளதால், அந்தேரி சுரங்கப்பாதை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் உள்ளூர் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4 ஆம் தேதி வரை இந்த அதீத கனமழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
