இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோணியின் 37 வது பிறந்த நாளையொட்டி அவரது மகள் அவருக்காக பாட்டு பாடிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தோணி நேற்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது மகள் ஜிவா அப்பாவுக்காக பிறந்த நாள் பாட்டு பாடினார். அதில் அப்பா உங்களுக்கு வயசு ஆயிடுச்சே என்று பாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.