மகனின் உயிரற்ற உடலை கண்முன் காட்டியும் கடைசி வரை நம்ப மறுத்த தாய்

ஓசூர் அருகே பெலத்தூரில், ஏரியில் குளிக்க சென்ற 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெங்களூருவில் வசித்து வரும் உதயகுமார், லட்சுமி தம்பதியின் மகனான சித்தார்த், கோடை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. மகன் இறந்து விட்டான் என்பதை கடைசி வரை நம்ப மறுத்த பெற்றோர், மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், துக்கம் தாளாமல் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com