Gujarat | சரியாக மூடாமல் இருந்த பாதாள சாக்கடை குழி..திடீரென உள்ளே விழுந்த தாய்,மகள்
சரியாக மூடாமல் இருந்த பாதாள சாக்கடை குழி..திடீரென உள்ளே விழுந்த தாய்,மகள்
குஜராத் மாநிலம் வதோதரா அருகே மழைநீர் தேங்கியிருந்த ஆழமான குழிக்குள் தாய் மற்றும் மகள் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்ரா பகுதியில் உள்ள ஜஷ்பூர் சாலையில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. பலத்த மழையால் குழி முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்ததால், அது இருப்பதே தெரியாமல் இருவரும் தவறி விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள், இருவரையும் பத்திரமாக மீட்டனர். குழிக்குள் விழுந்ததில் தாய் மற்றும் மகளுக்கு காயம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
