இதுவரை 23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், நாடு முழுவதும் இதுவரை 23 கோடியே 10 லட்சத்து 89 ஆயிரத்து 241 தடுப்பூசி டோஸ்கள் வழங்கியதாக, குறிப்பிட்டுள்ளது.
18 முதல் 44 வயதுக்குட்பட்ட 16 லட்சத்து 19 ஆயிரத்து 504 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை நேற்று செலுத்திக் கொண்டதாகவும், இதே வயதில் உள்ள 41 ஆயிரத்து 58 பேர் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம், இரண்டு கோடியே 76 லட்சத்து 35 ஆயிரத்து 937 பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பு மருந்தும்,
ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ் மருந்தும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 18 லட்சத்து 42 ஆயிரத்து 883 பேருக்கு முதல் டோஸும், இரண்டாயிரத்து 407 பேருக்கு இரண்டாவது டோஸும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது என, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
