India | Aadhar Card | மக்கள் தொகையை விட அதிக ஆதார் கார்டு - இந்தியாவையே திடுக்கிட வைத்த ரிப்போர்ட்

x

கேரளாவில் உண்மையான மக்கள்தொகையை விட அதிகமான ஆதார் பதிவுகள் உள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 60 லட்சத்து 63 ஆயிரம் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட்ட ஆதார் அட்டைகளின் எண்ணிக்கை, 4 கோடியே 9 லட்சத்து 68 ஆயிரத்து 282 ஆக உள்ளது. அதாவது 49 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் பதிவுகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும் இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடிக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளின் எண்ணிக்கை 142 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதாவது 1 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 947 கூடுதல் ஆதார் பதிவுகள் உள்ளன. கேரளாவைத் தவிர, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற பல மாநிலங்களிலும் இந்த வேறுபாடு உள்ளது. தனிப்பட்ட அடையாள அமைப்பு சரியான நேரத்தில் புதுப்பிக்கப்படாததே, இந்தப் பிழைக்குக் காரணம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்