சுங்கச்சாவடியில் ரூ. 5 ஆயிரம் கொள்ளையடிக்கும் குரங்கு : சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது

உத்தர பிரதேசத்தின் கான்பூரில், குரங்கு ஒன்று, சுங்கச்சாவடியில் புகுந்து 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது
சுங்கச்சாவடியில் ரூ. 5 ஆயிரம் கொள்ளையடிக்கும் குரங்கு : சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது
Published on

உத்தர பிரதேசத்தின் கான்பூரில், குரங்கு ஒன்று, சுங்கச்சாவடியில் புகுந்து 5 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. அங்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்கான வரிசையில் ஒரு கார் வந்து நிற்கிறது. அப்போது அந்த காரின் ஜன்னல் திறந்தவுடன் அதிலிருந்து இறங்கும் குரங்கு, பணம் செலுத்துவதற்கான வாயில் வழியாக உள்ளே புகுந்து, கல்லாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறது. இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முதலில் அதை விநோதமாக பார்க்கும் சுங்கச்சாவடி ஊழியர் பின்பு நடப்பதை அறிந்து சுதாரிப்பதற்குள் பணத்தை கொள்ளையடித்து அந்த குரங்கு தப்பி செல்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இத்தகைய சம்பவம் நடப்பது இது 2வது முறை என்றும் கொள்ளையடிக்க குரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் அந்த சுங்கச்சாவடி உயரதிகாரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com