

29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனியிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பை நடத்தி வரும் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. சன்னி லியோனியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை என சன்னி லியோன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.