மர்ம மனிதருக்கு 500 கோடி விட்டு சென்ற ரத்தன் டாடா.. - யார் அந்த தத்தா?

x

கடந்த அக்டோபர் மாதம் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. திருமணம் செய்து கொள்ளாத ரத்தன் டாடா, தனது பிற குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பல்வேறு சொத்துகளை எழுதி வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக, மோஹினி மோகன் தத்தா என்ற நபருக்கு 350 கோடி ரூபாய் வங்கி இருப்பு உள்ளிட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விட்டு சென்றிருக்கிறார். யார் அந்த தத்தா? என இணையம் கிறுகிறுக்க, அவர் ஜம்ஷெத்பூரை சேர்ந்த 80 வயது தொழிலதிபர் என்றும், ரத்தன் டாடாவின் இளமைகால நண்பர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் டாடாவுடன் நெருங்கிய பழகி வந்த இளம் நண்பர் ஷாந்தனு தற்போது டாடா மோட்டார்ஸின் பொது மேலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்