Mohanlal | ஒட்டுமொத்த கேரள மக்களின் இதயங்களையும் உருகவைக்கும் மோகன்லால் சொன்ன வார்த்தை..
Mohanlal | ஒட்டுமொத்த கேரள மக்களின் இதயங்களையும் உருகவைக்கும் மோகன்லால் சொன்ன வார்த்தை.."மலையாளிகளின் பெருமை.. நடிகர் மோகன்லால்" - பினராயி விஜயன் மத்திய அரசின் "தாதா சாகேப் பால்கே விருது" பெற்றதற்காக, நடிகர் மோகன்லாலை கேரள அரசு கௌரவித்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த 'லால் சலாம்' என்ற நிகழ்ச்சியில், தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன்லாலை கௌரவிக்கும் விதமாக அவருக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் ஆண்டிற்கு 3 அல்லது 4 திரைப்படங்களில் நடித்த நிலையில், மோகன்லால் 1984 ஆம் ஆண்டில் மட்டும் 34 திரைப்படங்களில் சாதனை புரிந்து, ஆச்சரியப்பட வைத்ததாக தெரிவித்தார். மேலும், நடிகர் மோகன்லால் ஒவ்வொரு மலையாளிகளின் பெருமை என அவர் நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Next Story
