சுதந்திர தின விழாவில் கவனம் பெற்ற மோடியின் தலைப்பாகை

x

சுதந்திர தின விழாவில் கவனம் பெற்ற மோடியின் தலைப்பாகை.சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி அணிந்துகொள்ளும் தலைப்பாகைகள், தனித்துவமான காட்சி மரபாக உருவாகியுள்ளன. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, காவி நிற தலைப்பாகையை அணிந்திருந்தார். கடந்த ஆண்டு, நாட்டின் வளமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் ராஜஸ்தானி லெஹெரியா தலைப்பாகையும், 2023ஆம் ஆண்டில், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கொண்ட தலைப்பாகையும் பிரதமர் அணிந்திருந்தார். 2022-ம் ஆண்டில், காவி நிற தலைப்பாகையும், 2021ம் ஆண்டில், கிரீம் மற்றும் குங்குமப்பூ தலைப்பாகையும் அணிந்திருந்தார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக முதன்முதலில் சுதந்திர தினத்தன்று, சிவப்பு நிற ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை பிரதமர் மோடி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்