'மோடியின் 75வது பிறந்தநாள்' - மாபெரும் ரத்ததான முகாம்
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை ஒட்டி, இதுவரை இல்லாத அளவில், மாபெரும் ரத்ததானம் முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
'Blood Donation Amrit Mahotsav 2.0' எனப் பெயரிடப்பட்ட இந்த முகாமில், 5 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்ததான முகாம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள Narendra Modi மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனை பிரதமர் மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். இம்முகாம், இந்தியா உட்பட 75 வெளிநாடுகள் என மொத்தம் ஏழாயிரத்து 500 இடங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த தான முகாமில் சேகரிப்படும் ரத்தம், குஜராத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ரத்த வங்கிகளில் பதப்படுத்தப்பட்டு, ரத்தம் தேவையானவர்களுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
Next Story
